தமிழக மீனவர் பிரச்சனை - தொடங்கியது இலங்கை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

First Published Jan 2, 2017, 3:37 PM IST
Highlights


தமிழக மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து இந்திய இலங்கை அமைச்சர்களிடையேயான பேச்சுவார்த்தை கொழும்பில் தொடங்கியுள்ளது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாகும் விவகாரம், இலங்கைவசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது,இழுவை மீன்பிடி வலைகள் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படவுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் தற்போது தொடங்கி நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங், தமிழக மீன்வளத்துறை செயலர் ககந்தீப் சிங் பேடி, மீன்வளத்துறை இயக்குனர் அந்தோணி சேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக இந்தியா - இலங்கை இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

இலங்கை அரசால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் நாட்டுடைமை ஆக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது நடைபெற்று வரும் பேச்சு வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

click me!