இன்று முதல் சென்னை - தி.மலைக்கு சிறப்பு ரயில்... கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே ஏற்பாடு!!

By Narendran SFirst Published Dec 5, 2022, 12:07 AM IST
Highlights

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து தி.மலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று முதல் சென்னையில் இருந்து தி.மலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுக்குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, சென்னை கடற்கரை-வேலூர்-சென்னை கடற்கரை இடையே இயக்கப்பட்ட (ரயில் எண்06033/06033) இனி திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிராம உதவியாளர் தேர்வின் வினாதாள் கசிவு... ரூ.10,000க்கு விற்பனை செய்ததால் சர்ச்சை!!

அதன்படி, சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையேயான சிறப்பு ரயில் டிச.5 ஆம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 7 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக திருவண்ணாமலை-சென்னை கடற்கரை சிறப்பு ரயில் டிச.6 ஆம் தேதி முதல் டிச.8 ஆம் தேதி வரை இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு வழக்கு... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!!

மறுமார்க்கத்தில் காலை 09.05 மணிக்கு புறப்பட்டு மாலை 03.45 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடையும். அதே போல் (ரயில் எண் 06115/06116) தாம்பரம்-திருவண்ணாமலை-தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களுக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!