பயணிகள் கவனத்திற்கு !! மதுரை - செங்கோட்டை சிறப்பு இரயில் இன்று முதல் ரத்து.. காரணம் இதுதான்..

By Thanalakshmi V  |  First Published Sep 5, 2022, 10:56 AM IST

மதுரை- செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாகவும் மைசூரு - திருவனந்தபுரம் இடையே சிறப்பு இரயில் வரும் 7 ஆம் தேதி இயக்கப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 


ராஜபாளையம் - சங்கரன்கோவில் இடையே ரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டை செல்லும் மதுரை - செங்கோட்டை (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 

மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் இதுக்குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதனிடையே பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மைசூரு - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 7 ஆம் தேதி முதல் 06201 என்ற வண்டி எண் கொண்ட சிறப்பு இரயில் மைசூரு - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படவுள்ளது. 

Latest Videos

மேலும் படிக்க:தமிழகம் முழுவதும் மக்கள் காத்துக்கொண்டிருக்கிறாங்க.! முழு நேர அரசியலுக்கு வாங்க... உதய்க்கு சேகர்பாபு அழைப்பு

தினந்தோறும் மதியம் 12.15 மணிக்கு மைசூருவில் இருந்து புறபடும் இந்த இரயில், மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லைக்கு வருகிறது. பின்பு, அங்கிருந்து 4.35 மணிக்கு புறப்பட்டு காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது. அதே போல், திருவனந்தபுரம் - மைசூரு மறுமார்க்கத்தில் 06202 வண்டி எண் கொண்ட சிறப்பு ரெயில் 8-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. 

இந்த இரயில் மதியம் 12.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு நெல்லைக்கு வருகிறது. பின்பு அங்கிருந்து 4.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 11.45 மணிக்கு மைசூரு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில்கள் மாண்டியா, கெங்கேரி, பெங்களூரு, கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் டவுன் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:எல்லையின்றி தொடரும் மணல் கொள்ளை... கண்டு கொள்ளாத திமுக அரசு...! அன்புமணி ஆவேசம்

இதில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி,  இரண்டு குளிர்சாதன வசதி மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!