காதல் திருமணம் செய்பவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு… உயர்நீதிமன்றம் அதிரடி!!!

 
Published : Aug 08, 2017, 09:54 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
காதல் திருமணம் செய்பவர்களை பாதுகாக்க தனிப்பிரிவு… உயர்நீதிமன்றம் அதிரடி!!!

சுருக்கம்

special branch for love married couples

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை பாதுக்க்கும் வகையில் காவல்துறையில் தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆனால்  மதுரை மாவட்டத்திற்கு மட்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சாதி ஆணவக் கொலைக்கு உள்ளான விமலா தேவி என்பவரின் கணவர் திலீப் குமார், சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு 2016 ஏப்ரல் மாதம் மாதம், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க தேமழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க காவல்துறையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கான நிர்வாக ஏற்பாடுகளை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அளிக்கப்பட்ட இத்தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படாததால் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக வழக்கு  வரும் நாளை மறுநாள்  விசாரிக்கப்படவிருக்கிறது. 

இந்நிலையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க காவல்துறையில் தனிப்பிரிவு உருவாக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது ஆனால்  மதுரை மாவட்டத்திற்கு மட்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!