
முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் வேண்டி பெரம்பலூர் அருகே உள்ள புனித தோமையார் ஆலயத்தில் கூட்டுத்திருப்பலி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டும் என வேண்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் கூட்டுத்திருப்பலி நடத்தினர்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபம் செய்து மெழுகுவர்த்தியுடன் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
இதில் அ.தி.மு.க வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாநில மீனவர் பிரிவு இணைசெயலாளர் தேவராஜன், அன்ன மங்கலம் ஊராட்சித் தலைவர் குதரத்துல்லா உள்பட அ.தி.மு.க வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.