
சேலத்த்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த கைதி உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
சேலம் தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ். இவரது மனைவி சந்திராம்மாள்.
இவர்களது மகன் ரத்தினம் , மருமகள்
சந்தானகுமாரி, பேரன் கௌதமன், பேத்தி விக்னேஸ்வரி ஆகிய
6 பேரும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தவழக்கில் குப்புராஜின் மற்றொரு மகன் சிவகுரு தான் இந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையிலடைப்கப்பட்டிருந்த சிவகுரு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 16 ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிவகுரு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.