கார்கள் அணி வகுக்க வேட்புமனு தாக்கலுக்கு சென்ற சவுமியா அன்புமணி.. வழி நெடுக உற்சாகமாக வரவேற்ற பாமக தொண்டர்கள்

By Ajmal Khan  |  First Published Mar 25, 2024, 1:52 PM IST

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாமக சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். கார் அணிவகுக்க சென்றவருக்கு பாமக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
 


வேட்புமனு தாக்கல் தீவிரம்

நாடாளுமன்ற தேர்தல தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் சார்பாக வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கப்பட்டு பிரச்சாரங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கலும் கடந்த வாரம் தொடங்கியுள்ளது. நாளை மறுதினத்தோடு வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து இன்று நல்ல நாள் என்பதால் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

தேர்தல் களத்தில் சவுமியா அன்புமணி

அந்த வகையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று 10 தொகுதிகளில் களம் காணவுள்ள பாமக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். பாமகவின் கோட்டையாக கருதப்படும் தொகுதி தருமபுரி, இந்த தொகுதியில் அன்புமணி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் பாமக சார்பாக அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடவுள்ளார். இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்த திண்டிவனம் வீட்டில் இருந்து தருமபுரிக்கு சென்றார்.

உற்சாகமாக வரவேற்ற பாமக தொண்டர்கள்

அப்போது அவருடன் பாமக தலைவரும், கணவருமான அன்புமணியும் உடன் இருந்தார்.  வழிநெடுக ஆயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து கோயிலில் சிறப்பு வழிபாட்டிற்கு பிறகு தரும்புரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்தார். 

இதையும் படியுங்கள்

சூடு பிடிக்கும் தேர்தல் களம்.! பாஜக மாநில செயலாளரை அதிமுகவிற்கு தட்டித்தூக்கிய எடப்பாடி-அதிர்ச்சியில் அண்ணாமலை

click me!