தமிழ்நாடு நம்பர் 1 ஆகனும்.. அது தான் என் லட்சியம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு ஏற்றுமதியில் முதல் மாநிலமாக உருவாக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Southern Region Export Excellence Award  - CM MK Stalin Speech

சென்னையில்‌ நடைபெற்ற தென்‌ பிராந்திய ஏற்றுமதியாளர்‌ விருது விழாவில்‌ கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,‌  இந்திய நாட்டின்‌ பொருளாதார வளர்ச்சியில்‌ ஏற்றுமதி மிக மிக அவசியம்‌. தற்போது, இந்தியாவின்‌ ஏற்றுமதியில்‌ தென்‌ மண்டலம்‌ 27 விழுக்காட்டுக்கும்‌ அதிகமாக பங்களிக்கிறது. 5 ஆண்டுகளுக்குள்‌ இந்தப்‌ பங்கு
35 விழுக்காட்டைத்‌ தாண்டும்‌ என்று நான்‌ நம்புகிறேன்‌. தென்‌ மண்டலத்தில்‌ தமிழகத்தின்‌ பங்கு மிகமிக அதிகமானது.

கடந்த ஆண்டில்‌,இந்தியாவின்‌ சர்வதேச வர்த்தகத்தில்‌ ரூ.1 லட்சத்து 93 ஆயிரம்‌ கோடி ஏற்றுமதி செய்து 8.97 விழுக்காடு பங்களிப்புடன்‌ இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய மாநிலமாகத்‌ தமிழ்நாடு திகழ்கிறது. இந்த விழுக்காடு என்பது ஆண்டுதோறும்‌ அதிகமாக வேண்டும்‌. தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக ஆக வேண்டும்‌ என்பதுதான்‌ இந்த அரசினுடைய விருப்பம்‌.  என்னுடைய இலட்சியம்‌.

Latest Videos

Southern Region Export Excellence Award  - CM MK Stalin Speech

2030- ஆம்‌ ஆண்டுக்குள்‌ ஒரு டிரில்லியன்‌ அமெரிக்க டாலர்‌ பொருளாதாரமாக, மாநிலப்‌ பொருளாதாரம்‌ மாற வேண்டும்‌ என்று நான்‌ பெரிதும்‌ நம்புகிறேன்‌. இந்த இலக்கை அடைய வேண்டும்‌ என்றால்‌ ஏற்றுமதி வர்த்தகமும்‌ அதிகமாக வேண்டும்‌. தமிழ்நாட்டின்‌ தற்போதைய ஏற்றுமதி அளவு 26 பில்லியன்‌ டாலர்‌. அதில்‌ இருந்து இருந்து 2030- ஆம்‌ ஆண்டிற்குள்‌ 100 பில்லியன்‌ அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும்‌.

தமிழ்நாட்டில்‌ ஏற்றுமதியை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்குத்‌ தேவையான பொதுக்‌ கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய்‌ சிறப்பு நிதி உருவாக்கப்படும். மதுரவாயல்‌-சென்னை துறைமுகம்‌ உயர்மட்டச்‌ சாலைத்‌ திட்டத்தை நிறைவேற்றிட ரூபாய்‌ 5 ஆயிரத்து 570 கோடி மதிப்பீட்டில்‌ 20.6 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்டச்‌ சாலை அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தென்‌ தமிழ்நாட்டின்‌ தொழில்‌ வளர்ச்சிக்கு மேலும்‌ உத்வேகம்‌ அளித்திட, தூத்துக்குடியில்‌, ஏற்றுமதியை மையமாகக்‌ கொண்ட “சர்வதேச அறைகலன்‌ பூங்காவிற்கு” அடிக்கல்‌ நாட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ தனித்துவம்‌ வாய்ந்த பல பொருட்கள்‌ தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உலக அளவில்‌ சந்தைப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ “மாவட்ட ஏற்றுமதி மையங்கள்‌” உருவாக்கப்பட்டு வருகிறது.

ஏற்றுமதி சார்ந்த ஒன்றிய அரசின்‌ திட்டங்கள்‌ தமிழ்நாட்டைச்‌ சார்ந்த நிறுவனங்களுக்கு முழுமையாக சென்றடைய பியோ அமைப்பு மாநில அரசுடன்‌ இணைந்து பங்காற்ற வேண்டும்‌. ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ அந்த மாவட்டத்தைச்‌ சார்ந்த சிறந்த ஏற்றுமதிக்கான பொருள்களை ஆங்காங்கே உற்பத்தி செய்தாலும்‌ அவற்றை ஒன்று திரட்டுவதிலும்‌, அப்பொருள்களின்‌ தரத்தினை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதிலும்‌ இருக்கக்கூடிய இடர்பாடுகளை களையும்‌ விதமாக, தனியார்‌ பங்களிப்புடன்‌ ஒரு ஏற்றுமதி கொள்முதல்‌ அமைப்பை உருவாக்க ஃபியோ அமைப்பு முன்வர வேண்டும்‌ என்று அவர் பேசினார்.

மேலும் படிக்க: அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1,000.. எப்போ கிடைக்கும் ? அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி செய்தி !!

vuukle one pixel image
click me!
vuukle one pixel image