அக்னிபத் போராட்டம்.. இன்று முதல் பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்படும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Jun 22, 2022, 5:27 PM IST
Highlights

சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் வழங்குவது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களுக்குள் புகுந்து ரயில்களை தீயிட்டு கொளித்தினர். நாட்டில் இதுவரை 7 இரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க:மூன்று பட்ட மேற்படிப்புகளை அறிமுகம் செய்ய சென்னை ஐஐடி திட்டம்

கடந்த வாரம் நடந்த போராட்டம் நாட்டையே உலுக்கியது. 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் புதிதாக ஆள் சேர்க்கும் திட்டமான அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு எதிராக இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மற்றும் சாலை மறியல் ஈடுபட்ட போராட்டக்காரர்கள்,பயணிகள் ரயிலுக்கு தீவைக்கும் சம்பவத்திலும் ஈடுபட்டனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனிடையே நிலமையை கட்டுபடுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி ஓராண்டுக்கு அக்னி வீரர்களுக்கு ராணுவத்தில் சேருவதற்கான உச்ச வயது வரம்பிலிருந்து 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும்  உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறைகளில் அக்னி வீரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இருந்தபோதிலும் , வட மாநிலங்களை தொடர்ந்து தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய தென் மாநிலங்களிலும் பரவியது. 

இந்த நிலையில் தான் தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரம் டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படுவதாக கடந்த 22ம் தேதி தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. எனவே, இன்று முதல் மீண்டும் பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க: மேகதாது அணை விவகாரம்.. சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம்..

click me!