ரயில்வே அதிகாரிக்காக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் பிளாட்பாரம் மாற்றப்பட்டதா?நடந்தது என்ன?தெற்கு ரயில்வே விளக்கம்

By Ajmal Khan  |  First Published Nov 17, 2023, 6:48 PM IST

சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தான்  சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸில் ரயிலாக மதுரைக்கு செல்வதாக தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, அதன்படி 5வது பிளாட்பாரத்தில் வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், இரவு 9:40 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலாக மதுரைக்கு சென்றதாகவும், இதன் காரணமாகத்தான் 4ஆம் பிளாட்பாரத்திற்கு மாற்றவில்லை என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.


பாண்டியன் ரயில் பிளாட்பாரம் மாற்ற்ம ஏன்.?

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே வாரியத்தின் அதிகாரியின் சிறப்பு ஆய்வு ரயில் நடைமேடை எண் நான்கிலும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை எண் ஐந்திலும் நிறுத்தப்பட்டதால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமம் தொடர்பாக ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்குமாறு தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் திரு ஆர்.என்.சிங், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், 

Tap to resize

Latest Videos

பிளாட்பாரம் 4ல் பாண்டியன் இயக்காதது ஏன்.?

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்னை நகரின் ஒரு முக்கிய ரயில் நிலையமாகும் இது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை கையாளுகிறது. இந்த ரயில் நிலையத்தில் நடைமேடைகள் உள்ளன. 9 இதில் முதல் மூன்று நடைமேடைகள் மற்ற நடைமேடைகளுடன் ஒப்பிடும்போது நீளம் குறைந்தவை. நடைமேடை எண்.4 நிலையத்தின் முன்வாசலுக்கு செல்லும் வசதியினை கொண்டுள்ளதால் நெரிசல் நேரங்களில் பல நீண்டதூர ரயில்களைக் கையாளமுடிகிறது.

தினசரி 18:00 மணி முதல் 22:00 மணி வரை சென்னை எழும்பூரில் இருந்து பல ரயில்கள் இயக்கப்படுகிறது. 16-11-2023 அன்று சார்மினார் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் நடைமேடை 4-ல் இருந்து புறப்பட்டன. இதன் விளைவாக, நடைமேடை எண்.4 தொடர்ந்து 18:00 மணி முதல் 20:40 மணி நேரம் வரை பயன்பாட்டில் இருந்தது. தொடர் இணைப்பு ரயில் ஏற்பாட்டின்படி ரயில் எண்:22676 சோழன் எக்ஸ்பிரஸ் எழும்பூர் ரயில் நிலையத்தினை 18:20-க்கு வந்தடைந்தவுடன், ரயில் எண்:12637 பாண்டியன் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டு 21:40 மணிக்குத் இயக்கப்படுகிறது.

சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலே பாண்டியன் ரயில்

இந்த ரயிலுக்கு பணிமனையில் எந்த பராமரிப்பும் தேவையில்லாததால் எந்த நடைமேடைக்கு வருகிறதோ அதே நடைமேடையில் நிறுத்தப்பட்டு பாண்டியன் எக்ஸ்பிரசாக புறப்படுவதற்கு சுத்தம்/பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. 16-11-2023 அன்று ரயில் எண் 22676 சோழன் விரைவு ரயில் நடைமேடை எண்.5. இல் 18.20 மணிக்கு வந்து சேர்ந்தது, மேலும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையிலேயே சுத்தம் செய்யப்பட்டது. பாண்டியன் விரைவு ரயில் சேவை தொடங்கியதிலிருந்தே பல முறை நடைமேடை எண். ஐந்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே வாரியத்தின் அதிகாரியின் சிறப்பு ஆய்வு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை எண்.நான்கிற்கு 20:57 மணிக்குதான் வந்து சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து, பொதிகை எக்ஸ்பிரஸ் 20:40க்கு நடைமேடைஎண்:நான்கிலிருந்து புறப்பட்டு சென்றபிறகுதான் அந்த நடைமேடையிலிருந்து அடுத்த ரயில் வண்டியை இயக்க இடம் கிடைத்தது என்பது தெளிவாகிறது.

பயணிகளுக்கு குழப்பம் ஏற்படும்

21:40 மணிகக்கு புறப்பட வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரசில் பெரும்பாலான பயணிகள் ஏற்கனவே ஏறியிருந்த நிலையில் வெறும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்த ரயிலை நடைமேடை எண்.ஐந்திலிருந்து நடைமேடை. எண் நான்கிற்கு மாற்றுவது என்பது பயணிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். எனவே, நடைமேடை எண்.நான்கில் சிறப்பு ஆய்வு ரயிலும், நடைமேடை எண்.ஐந்தில் பாண்டியன் எக்ஸ்பிரசும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது முழுவதும் ரயில் போக்குவரத்தின் சீரான செயல்பாட்டை உறுதிப்படுத்த மட்டுமே என்று தெளிவுபடுத்தப்படுகிறது. அனைத்து ரயில் பணிகளுக்கும் தெற்கு ரயில்வே எப்போதும் போல் தொடர்ந்து சிறந்த சேவையையே வழங்கும் என தெற்கு ரயில்வே சார்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

ஒரு அதிகாரி பயணிக்க தனி ரயில்.. பாண்டியன் எக்ஸ்பிரஸ் வேறு பிளாட்பாரம் மாற்றம்-1000 பயணிகள் அவதி- சு.வெங்கடேசன்

click me!