அந்தமானைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்குகிறது தென் மேற்கு பருவமழை…

First Published May 24, 2017, 9:00 AM IST
Highlights
south west moonsoon started in andaman and will continue to kerala and tamilnadu


அந்தமானைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவில் தொடங்குகிறது தென் மேற்கு பருவமழை…

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட முன் கூட்டியே தொடங்கும் என்றும், சராசரி அளவைவிட கூடுதலாக மழை அளவு இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததது.

பொதுவாக தென் மேற்கு பருவ மழை ஜுன் முதல் வாரத்தில் தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று முன்கூட்டியே தொடங்கியுள்ளது. அதன்படி அந்தமான்-நிகோபர் தீவுகளில் தற்போது பருவ மழை தொடங்கியுள்ளது.

இதையடுத்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் கேரளாவிலும், அதைத் தொடர்ந்து சரியாக ஜுன் 1 ஆம் தேதி தமிழகத்திலும் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை  கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது. வருகிற 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இரண்டு வாரங்களாக, வடக்கு மற்றும் உள் மாவட்டங்களில், அனல் அலை வீசியது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் வெப்ப , அலை தணிந்து, பெரும்பாலான மாவட்டங்களில், வெப்ப நிலை, 40 டிகிரிக்கு கீழ் குறைந்து உள்ளது.

:இந்நிலையில் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு பல இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களிலும், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!