தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்க வரும் கனமழை... சென்னைக்கு காத்திருக்கு செம்ம மழை!

By sathish kFirst Published Sep 25, 2018, 12:34 PM IST
Highlights

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ள நிலையில் வெப்பச்சலனம்  காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ள நிலையில் வெப்பச்சலனம்  காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்படும் என்றும் மதியம் மற்றும் மாலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரி, நெல்லை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழை மற்றும் இடியுடன் காற்று வீசக்கூடும் என்றும், வறட்சி மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் உள் மாவட்டங்களான  மதுரை, சிவகங்கை, திருச்சி, நாமக்கல், சேலம், கரூர் மன்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேலும் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி,  தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சற்று கனமழை பெய்யும் என்றும்,  மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளான உதகை, தேனி, வால்பாறை பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிக அளவாக ராஜபாளையம் மற்றும் விருதுநகரில் 11 செ.மீ மழையும், அவிநாசி , திருப்பூரில் 10 செ.மீ.மழையும் திண்டுக்கல்லில் 8 செ.மீ மழையும் மழையும் பெய்துள்ளது.

 

click me!