நவம்பர் 25 ஆம் தேதிக்குள் தமிழகத்தை தாக்கும் 2 கடும் புயல்கள் !! ஒரே நேரத்தில் புயலும் மழையும் இருக்கு…

By sathish kFirst Published Sep 25, 2018, 11:00 AM IST
Highlights

தமிழகத்தில் நாளை முதல்  பரவலாக மழை பெய்ய தொடங்கும் என்றும்,  அக்டோபர் 31 முதல் நவம்பர் 25 க்குள் காற்றுடன் கூடிய மழையும் புயலும் தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இரண்டு புயல்கள்  வர வாய்ப்பு இருப்பதாக கூறும் வானிலை ஆய்வாளர்கள் , அவை நாகப்பட்டினம் வழியாக கடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் நாளை முதல்  பரவலாக மழை பெய்ய தொடங்கும் என்றும்,  அக்டோபர் 31 முதல் நவம்பர் 25 க்குள் காற்றுடன் கூடிய மழையும் புயலும் தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இரண்டு புயல்கள்  வர வாய்ப்பு இருப்பதாக கூறும் வானிலை ஆய்வாளர்கள் , அவை நாகப்பட்டினம் வழியாக கடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும் நவம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரை காற்று, புயல் இல்லாத கன மழை கட்டாயம் உண்டு என்று  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழையால் தமிழகத்தில் கோவை,நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மட்டும் ஓரளவு பெய்தது. 

மற்றபடி சென்னை உட்பட எந்த மாவட்டங்களிலும் மழை இல்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தான் மழை அதிகம் இருக்கும். இந்நிலையில் தென் மேற்கு பருவமழை சீசன் விரைவில் முடியவுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்  மத்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நாளை முதல்  பரவலாக மழை பெய்ய தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த மாதம் 31 ஆம் தேதி முதல் (அதாவது அக்டோபர் 31 முதல்)  நவம்பர் 25 க்குள்  தமிழகத்தை காற்றுடன் கூடிய மழையும் புயலும் தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அந்த 25 நாட்களில் தமிழகத்தில் இரண்டு புயல்கள்  வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்,  அவை நாகப்பட்டினம் வழியாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இந்த புயல் முடிந்தவுடன் தமிழகம் முழுவதும்  நவம்பர் 27 முதல் டிசம்பர் 31 வரை காற்று, புயல் இல்லாத கன மழை கட்டாயம் உண்டு என்றும்   வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

click me!