
சௌந்தர்யா ரஜினிகாந்த், ஒரு அப்பாவின் ஆசீர்வதிக்கப்பட்ட மகளாக தனது பிறந்த நாள் வாழ்த்தை டிவிட்டரில் கூறியுள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பதிவில், மன்னன், மேதை என்றெல்லாம் ஹேஷ் டேக் போட்டு, ரஜினிகாந்த்தின் பென்சில் வரைபடங்களைத் தொகுத்து ஒரு வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அதில், ரஜினி நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களுடன், அந்தக் கதாபாத்திரங்களின் கெட்டப்பின் பென்சில் ட்ராயிங் தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதில், காளி, சின்னராசு, முரளி, சக்கரவர்த்தி, மூக்கையன், மாணிக்கம், காளிமுத்து, அலெக்ஸ் பாண்டியன், ஸ்ரீராகவேந்திரர், பில்லா, விஸ்வநாத், சூர்யா, கிருஷ்ணன், பாலு, பாண்டியன் வானவராயன், பரட்டை, தீபக் என கதாபாத்திரங்கள் வரிசை கட்டுகின்றன.
ரஜினி நடித்த படங்களின் இந்தப் பாத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டவை. தன் அழகுணர்ச்சியை திறம்படத் தொகுத்து டிவிட்டர் பதிவில் வெளியிட்டு தந்தைக்கு மகள் சொல்லும் வாழ்த்தாக சௌந்தர்யா வெளிப்படுத்தியுள்ளார்.