
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வாழ்த்துக் குவியலில், பேட்டால் பேசிய இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் பேட்ஸ்மென் சச்சினின் வாழ்த்தும் ஒன்று.
சச்சின் டெண்டுல்கர் இது குறித்து தனது டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அதில், தங்களுக்கு அனைத்து விதமான ஆரோக்கியமும் சேர்ந்து, மகிழ்ச்சி கூட சேர வாழ்த்துகள். தங்களின் 67வது பிறந்த தினத்தில் தங்களுக்கு வாழ்த்து என்று கூறியுள்ளார்.