திருப்பரங்குன்றம் சூரசம்ஹாரம்: விண்ணை முட்டிய "அரோகரா ” கோஷம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

By Thanalakshmi VFirst Published Oct 30, 2022, 10:49 AM IST
Highlights

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வேல் வாங்கும் நிகழ்வில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
 

ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது . 

இன்று சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாலை கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து சுவாமி " வேல் வாங்கும் " நிகழ்ச்சி கோயில் ஆலய பணியாளர் திருக்கண்ணில் நடைபெற்றது . இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று "அரோகரா ” கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

மேலும் படிக்க:கந்தசஷ்டி விரதம் 2022 : விரதத்தின் இரண்டாம் நாள் வழிபாடு

முன்னதாக சத்திய கிரீஸ்வரர் , கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார் . இதனை தொடர்ந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி , கற்பக விநாயகர் , துர்க்கை அம்மன் , சத்தியகிரீஸ்வரர் , பவளக்கனிவாய் பெருமாள் , கோவர்த்தனாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது . 

பின்னர் அம்பாள் கரத்திலிருக்கும் நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு சுவாமி கரத்தில் சாத்துப்படி செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது . இதயையடுத்து சுவாமி பூ சப்பரத்தில் எழுந்தருளி திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் . 

மேலும் படிக்க:முருகன் 108 போற்றி பாடல் வரிகள்.. தினமும் சொல்லுங்கள்..

click me!