காஷ்மீர் பனிச்ச்சரிவில் தஞ்சையைச் சேர்ந்த வீரரும் பலி…

 
Published : Jan 27, 2017, 11:43 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
காஷ்மீர் பனிச்ச்சரிவில் தஞ்சையைச் சேர்ந்த வீரரும் பலி…

சுருக்கம்

தஞ்சை:

காஷ்மீரில் 2 இடங்களில் நிகழ்ந்த பனிச்சரிவு சம்பவத்தில் இதுவரை 10 வீரர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இளவரசன் உயிரிழந்துள்ளார்.

இவர் தஞ்சையை அடுத்த கண்ணந்தகுடி கீழையுரைச் சேர்ந்த விவசாயி பூமிநாதன் என்பவரின் மகன். நேற்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த இராணுவ வீரர்கள் 10 பேரில் இவரும் ஒருவர்.

இளவரசன் உயிரிழந்ததால் சொந்த ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் பல வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. உறைநிலைக்கும் கீழே வெப்பநிலை நிலவுவதால் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதேபோன்று நேற்று முன்தினம் கந்தர்பல் மாவட்டத்தில் வீடு ஒன்று பனிச்சரிவில் புதையுண்டதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் சோனாமார்க் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கிய வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பன்டிப்போரா மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே குரேஷ் செக்டார் பகுதியில் உள்ள ராணுவ முகாம் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் புதையுண்டது. இதில் முகாமில் இருந்த வீரர்கள் சிக்கினர் உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் அதிகாரி உட்பட 7 வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். பனிக்குவியலில் சிக்கி உயிரிழந்த 3 வீரர்களின் உடல்கள் நேற்று காலை மீட்கப்பட்டது.

இப்படி அடிக்கடி ஏற்படும் பனிச்சரிவால் ஏராளாமன வீரர்கள் இறக்க நேரிடுகிறது. இதனால், வீரர்களின் குடும்பத்தார் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?