மதுரையில் பைப் வெடிகுண்டு பறிமுதல்… குடியரசு தினத்தை சீர்குலைக்க சதியா என போலீஸ் விசாரணை..

 
Published : Jan 27, 2017, 11:02 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
மதுரையில் பைப் வெடிகுண்டு பறிமுதல்… குடியரசு தினத்தை சீர்குலைக்க சதியா என போலீஸ் விசாரணை..

சுருக்கம்

மதுரையில் பைப் வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்களுடன்  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குடியரசு தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டனரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை புதூர் காந்திபுரம் பகுதியில் ரியாஸ் பட்டன் கடையை நடத்தி வருபவர் பாண்டி என்ற அப்துல் ரஹ்மான்.

அவரது கடையில் பெடிகுண்டு தயாரிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினரர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

அபோது அங்கு 1 அடி நீளமுள்ள இரண்டு பைப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் ஒன்றில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருந்தன. மற்றொன்று, இணைக்க தயார் நிலையில் இருந்துள்ளது.

இது பற்றி தகவல் அறிந்த மதிச்சியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் இரண்டு பைப் வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
 

இது தொடர்பாக பாண்டி என்ற அப்துல் ரஹ்மான் மற்றும் அப்துல்லா என்ற கே.அப்துல்லா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் முஸ்லிம் முன்னேற்ற பாசறை அமைப்பை சேர்ந்தவர்கள் எனக்கூறப்படுகிறது. இவர்கள் என்ன நோக்கத்திற்காக பைப் குண்டை தயாரித்து வருகின்றனர் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?