ஒரு குடும்பத்தில் பலர் நகைக்கடன்… தமிழக அரசு வச்ச ஆப்பு…!

By manimegalai aFirst Published Sep 22, 2021, 9:09 AM IST
Highlights

தமிழகத்தில் ஒரே குடும்பத்தில் பலர் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கான நகைக்கடன் பெற்றிருந்தால் அதனை வசூல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் ஒரே குடும்பத்தில் பலர் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கான நகைக்கடன் பெற்றிருந்தால் அதனை வசூல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

அதன் பின்னர் பயனாளிகள் பற்றிய விவரங்கள் கிட்டத்தட்ட 51 படிநிலைகளில் சேகரிக்கப்பட்டு அவை கணினி மூலமாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பது தெரிய வந்தது.

இந் நிலையில் 5 சவரனுக்கு மேல் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன்களை வசூலிக்குமாறு அனைத்து கூட்டுறவு வங்கி மண்டல மேலாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கடன் தள்ளுபடியை பெற ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் வெவ்வேறு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கு அதிகமாக கடன் பெற்று இருக்கின்றனர். இதுகுறித்து ஆதாரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு உள்ளது.

விதிகளை மீறி நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து நகைக்கடனை தொகை வசூலிக்கப்பட வேண்டும். கடன் தவணையை கட்ட தவறினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

click me!