
கம்பேக் அன்னபூரணி அரசு அம்மா :
சமூக வலைதளங்களில் தற்போதைய சென்சேஷனல் அம்மா, ஆதிபராசக்தி என்ற பல்வேறு பெயர்களால் வலம் வரும் அன்னப்பூரணி அரசு தான். எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று சந்தேகித்த சமூகவலைதளவாசிகள், நடந்ததெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்த அதே பெண்மணி தான் இந்த அன்னப்பூரணி என்பதை கண்டுபிடித்தனர். ரொம்ப நாள் கழித்து மீண்டும் பார்முக்கு வந்து இருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா.
செங்கல்பட்டில் நடக்க இருந்த அன்னபூரணி அரசு அம்மாவின் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியதோடு, காவல்துறை, வழக்கு, விசாரணை என்று பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அம்மா எனர்ஜி தர்ஷன் என்ற பெயரில் தனது குழந்தைகளை காண ஏப்ரல் 3 ம் தேதி வரப்போவதாக மீண்டும் அறிவித்துள்ளார்.
எனர்ஜி தரிசனம் :
சென்னையில் உள்ள சுதானந்த ஆசிரமத்தில் வரும் ஏப்ரல் 3ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கும் இந்த எனர்ஜி தர்ஷன் அருள்பாலிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் தலா 700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏப்ரல் 1 ம் தேதியுடன் இந்த முன்பதிவு முடிவடையும் எந்த காரணம் கொண்டும் கட்டணத்தை திரும்ப வழங்க முடியாது என்றும் அம்மா எனர்ஜி தர்ஷன் குழு அறிவித்துள்ளது. இதே அன்னபூரணி சில ஆண்டுகளுக்கு முன்பு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தனது கள்ளக்காதலன் அரசுக்காக லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நியாயம் கேட்க சென்ற வீடியோ வைரலானதும், பலரும் இவரை கலாய்த்து தள்ளினர்.
பக்தி பரவசத்துடன் அன்னபூரணி அருள் வாக்கு சொல்லும் வீடியோக்கள் காவல்துறை வரை சென்றது. இதனால் அன்னபூரணி ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஜனவரி 1-ம் தேதிக்கான திவ்ய தரிசனம் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. நெட்டிசன்கள் வழக்கம் போல, அன்னபூரணியை ஆன்லைனில் வச்சு செய்ய ஆரம்பித்து விட்டனர்.