நீயும் நானும் நீரோ மன்னன் தான்டா: தீ விபத்துக்கு பின்னே தெரியும் கோர முகங்கள்...

First Published Jun 1, 2017, 8:02 PM IST
Highlights
Social media comments about The Chennai Silks


ரோம் நகர் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்தானாம்...இந்த வாக்கியத்தை வாழ்க்கையில் எத்தனையோ முறை பயன்படுத்தியிருக்கிறோம், பயன்படுத்த கேட்டிருக்கிறோம். மிகப்பெரிய பிரச்னை ஒன்று சமூகத்தை உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கையில் அதைப்பற்றி கொஞ்சம் கவலைப்படாமல், அக்கறை எடுத்துக்கொள்ளாமல் கொண்டாட்டத்தில் லயிப்பவர்களையும், அந்த பிரச்னையை மையமாக வைத்து கூத்தடிப்பவர்களை உருவகப்படுத்தும் வாக்கியம் இது. 

ஆக்சுவலி அந்த நீரோ மன்னன் யாரோ? யார் பெற்ற பிள்ளையோ? உலக மக்களின் வாயில் விழுந்து கசாமுசாவென இடிபடுகிறான். 

ஆனால், நீரோ மன்னன் மட்டும்தான் ஃபிடில் வாசித்தானா! நாமெல்லாம் நல்லபிள்ளைகள் தானா?

இல்லவே இல்லை என்கிறது இந்த பதிவு. சாலையில் ஒரு பிரச்னை நடக்கையில் அதை ச்சும்மா கவனித்துக் கொண்டு பொழுது போக்குவதே குற்றம் எனில் அதை மையமாக வைத்து ஜோக் எழுதுவதும், மீம்ஸ் போடுவதும் எதில் சேர்த்தி?!

நேற்று இந்நேரம் பற்றி எரிந்து கொண்டிருந்த தி சென்னை சில்க்ஸ் விவகாரத்தை மையமாக வைத்து ஜோக் எழுதி அதை சமூக வலைதளங்களில் பதிந்தும், பகிர்ந்தும் லைக்ஸ் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள் பலர். எப்படி? இப்படி...

“எக்ஸ்ட்ரா ஒரு கட்ட பை (பிக் ஷாப்பர்) கேட்டதுக்கு மொறச்சான்டா. ஆனா இன்னைக்கு மொத்தமும் போச்சா! # தி சென்னை சில்க்ஸ்.

பத்தினி சாபத்தால அன்னைக்கு மதுரை எரிஞ்சது, எத்தினி புருஷன் சாபமோ தெரீல இன்னிக்கு சென்னைக்கு சில்க்ஸ் எரியுது!

நேற்று வரை  தி சென்னை சில்க்ஸ். ஆனால் இன்று முதல் ‘தீ’ சென்னை சில்க்ஸ்!

பர்சேஸ் பண்ணி முடிச்சவனுக்கு பில்லுல சூடு வெச்சானுங்க. ஆனா இன்னைக்கு பில்டிங்கே அவனுங்களுக்கு சூடு வெச்சிடுச்சு. அவ்வ்வ்வ்!

தீ பிடிக்கும் ஆஃபர்னு வெளம்பரம் போட்டானுங்க, ஆனா இன்னைக்கு அவனுங்க கடையே தீ பிடிச்சு எரியுது! கடவுள் இருக்கான்டா கொமாரு @ தி சென்னை சில்க்ஸ் தீ .”

-இப்படியாக தொடர்கிறது வாட்ஸ் அப் வறுப்புகள்.
இப்போ சொல்லுங்க பாஸ், நாமும் நீரோ மன்னன்தானே!
திருந்தணும் பாஸ் நல்லா திருந்தணும்.

click me!