
சென்னை தி. நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலையில் தொடங்கிய தீ விபத்தானது இன்று பிற்பகல் வரை எரிந்துகொண்டு தான் இருந்தது. இந்த கோரா விபத்தால் 7 மாடிகளில் இருந்தும் வெளியேறிய கரும்புகையால், திநகரமே தீ நகரமாக காட்சியளித்தது. இந்த புகை மண்டலமும் தீயை அணைப்பதில் பிரச்னையை ஏற்படுத்த முக்கிய காரணமாகயிருந்தது.
எனவே, இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க வந்த கட்டுமானப் பிரிவைச் சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் பத்திரிகையாளர்களிடம் அவர்கள் கூறியதாவது,' விபத்து நடந்த தனியார் ஜவுளிக்கடையின் கீழ் உள்ள அடித்தளத்தில், மின்சாரம் நிற்கும்போது பயன்படும் 'ஜென் செட்'களை இயக்கவைத்திருந்த, 10க்கும் அதிகமான டீசல் பேரல்கள்தான் விபத்துக்கு முக்கியப்பங்கு வகித்திருக்கின்றன.
குறிப்பாக ஜவுளிக்கடையில் மின்கசிவு ஏற்பட்டவுடன், முதலில் இந்த பேரல்களில் தீப்பற்றியிருக்கிறது. மேலும் அந்த இடத்தில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கயிருக்கும் துணிப்பைகள் நிறைய குவியலாக இருந்திருக்கின்றன. எனவே, பேரலில் இருந்த தீயானது, துணிப்பைகளில் பரவி, அடுத்தடுத்த தளங்களுக்குச் சென்றுள்ளது.
இந்த விபத்தில் பேரல்கள் முக்கியமாக வெடித்துள்ளன. இந்த விபத்தில் கட்டடத்தின் சில பகுதிகள், வெப்பம் தாங்காமல் கீழே விழுந்து இடிந்துள்ளது. இதனால் விபத்து நடந்த, ஜவுளிக்கடை கட்டடத்தை உடனடியாக உடைத்து வருகிறது சென்னை மாநகராட்சி நிர்வாகம்.