
சென்னை தியாகராயநகரில் இருக்கும் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த தீ ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்ப்பட்டு, கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது.
இதற்காக பிரத்யேக வாகனம் கொண்டு வரப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. கட்டட இடிப்பு பணிக்காக துணிக்கடையை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சூழலில் கட்டடத்தின் 4 வது தளத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் கட்டட இடிப்பு பணி தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனுமதியின்றி கட்டப்பட்ட மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு நள்ளிரவில் இடிக்கப்பட்டது போல், சென்னை சில்க்ஸ் கட்டடம்இன்றே இரவே இடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்டடம் இடிக்கப்படுவதை பார்வையிடுவதற்காக ஏராளமான மக்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.