முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் காலை உணவுத் திட்டம்;முதல்வர் முக ஸ்டாலின் கனவுத் திட்டம் நிறைவேறியது

By Ajmal KhanFirst Published Sep 15, 2022, 2:07 PM IST
Highlights

ஏழை, எளிய மாணவர்களின் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, காலை உணவு திட்டத்தை தொடங்கியதன் மூலம் அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்களின் ஆர்வம் திரும்பியுள்ளது.  

சத்தான காலை உணவு திட்டம்

கண் விழித்தது முதல் சுறுசுறுப்பாக குழந்தைகள் இயங்குவதற்கான சக்தி காலை உணவிலிருந்து கிடைக்கிறது. ஆனால், உணவு உண்பதன் நோக்கம், வயிற்றை நிரப்புவது மட்டும் அல்ல. ஆரோக்கியத்துக்கான கலோரி மற்றும் புரதச்சத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கும் வைட்டமினும் தாதுப்பொருட்களும் நார்ச்சத்தும் உணவிலிருந்து கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆனால் தற்போது நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே பள்ளிக்கு புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்தது. மேலும்  பள்ளிகள் மிகத் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்குக் காரணமாக இருக்கிறது. இதை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை #TNBreakfast தொடங்குவதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

“சமூக நீதி வரலாற்றில் சாதனை.! முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசு !”

மாநில நிதியில் தொடங்கிய திட்டம்

அதன்படி  417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு #TNBreakfast திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே தமிழக அரசு சார்பாக மதிய உணவு திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழ்மையான குழந்தைகளுக்கு காலையிலும் சத்தான உணவு வழங்கும் வகையில் காய்கறிகளுடன், காலை உணவானது வழங்கும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு எந்த ஒரு நிதியும் ஒதுக்காத நிலையில் தமிழக அரசே தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.. உங்கள் தேவைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின்

சத்தான உணவு பட்டியல்

தமிழ்நாட்டில் இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக இருக்கும் இளம்பகவத், நந்தகுமார் ஆகியோர் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டு பலன் பெற்றவர்கள். இன்று தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் பயனடையும் வகையில் வழங்கப்படவுள்ள காலை உணவில்,

திங்கட்கிழமை உப்புமா வகைகள்
ரவா உப்புமா காய்கறி சாம்பார்
சேமியா உப்புமா காய்கறி சாம்பார்
அரிசி உப்புமா காய்கறி சாம்பார்
கோதுமை ரவா உப்புமா காய்கறி சாம்பார்

செவ்வாய்க்கிழமை கிச்சடி வகை
ரவா காய்கறி கிச்சடி
சேமியா காய்கறி கிச்சடி
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவா காய்கறி கிச்சடி

புதன்கிழமை பொங்கல் வகை
ரவா பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார்
வெண் பொங்கல் காய்கறி சாம்பார்

வியாழக்கிழமை உப்புமா வகைகள்
ரவா உப்புமா காய்கறி சாம்பார்
சேமியா உப்புமா காய்கறி சாம்பார்
அரிசி உப்புமா காய்கறி சாம்பார்
கோதுமை ரவா உப்புமா காய்கறி சாம்பார்


வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் இனிப்பு
ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் ரவா கேசரி, சேமியா கேசரி வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது இரண்டு நாட்களில் ஆனது இயன்ற அளவு அந்த பகுதிகளின் விலையும் கிடைக்கும் சிறு தானியங்கள் அடிப்படையான சிற்றுண்டி வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

தரமான உணவு வழங்க வேண்டும்

காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும். நகர்ப்புறப் பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மையப்படுத்தப்பட்ட சமையலறை அல்லது வேறு ஏதேனும் தகுதி வாய்ந்த அமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும். காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப் பொருட்கள் (Extraneous substance) கலக்காமலும் சுத்தமாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

 

தமிழக அரசின் இந்த காலை உணவு #TNBreakfast திட்டத்தால் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான இல்லங்களில் ஒரு வேலை உணவுக்காக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த சிறப்பு திட்டத்தால் ஏழை எளிய மாணவர்கள் மேலும் பயனடைவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

‘மெட்ராஸ் ஸ்டேட்’டூ ‘தமிழ்நாடு’ அறிஞர் அண்ணாவின் முத்தான முதல் 15 சாதனைகள்...

click me!