
திரையரங்கு உரிமையாளர்கள் ஜிஎஸ்டியை பொது மக்களின் தலையில் சுமையை ஏற்ற நினைப்பதாகவும், இத்தகைய செயலை தமிழக அரசு ஊக்குவிக்க கூடாது எனவும் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் நடிகர்கள் ரஜினிகாந்த். விஜய், சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கும் திரைப்படங்களுக்குதிரையரங்க உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வததாகவும் தற்போழுது அனைத்து நடிகர்களின் திரைப்படம் வெளியிடும் கூடுதல் கட்டணம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழில் பெயர் மற்றும் U/A திரைப்படங்களுக்கு வரி விலக்கு தமிழக அரசு கொடுத்தாலும் அதனை திரையரங்கு உரிமையாளர்கள் பொதுமக்களுக்கு வரி சலுகை வழங்கவில்லை எனவும், அதே போல் தமிழ் பெயர் அல்லாத திரைப்படம் மற்றும் மாற்று மொழி திரைப்படம் மூலம் வரி ஏய்ப்பும் செய்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகுபலி 2 திரைப்படம் மூலம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைப்பெற்றுள்ளதாக புகார் அளித்தும் இதுவரைஎவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
தற்போழுது GST வரவால், திரையரங்கு உரிமையாளர்கள் அரசு நிர்ணயம் செய்த கட்டணம், தன்னிச்சையான கூடுதல் கட்டணம், GST சேர்ந்து வசூலித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
திரையரங்குகளின் விலைப்பட்டியலை தமிழக அரசு சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் வெளியிட வேண்டும் எனவும், திரையரங்கு உரிமையாளர்களின் செயலை தமிழக அரசு ஊக்குவித்தால் அனைத்து வணிகர்களும் ஓவர் விலையை மக்களின் தலையில் ஏற்றி விடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.