தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய சமூக ஆர்வலர் நந்தினி கைது.! என்ன காரணம் தெரியுமா.?

Published : Jun 01, 2023, 11:50 AM ISTUpdated : Jun 01, 2023, 11:53 AM IST
தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய சமூக ஆர்வலர் நந்தினி கைது.! என்ன காரணம் தெரியுமா.?

சுருக்கம்

பாஜகவினர் மிரட்டல் விடுப்பதாக கூறி பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் நந்தினையை  போலீசார் கைது செய்தனர். 

மதுவிற்கு எதிராக போராட்டம்

மதுக்கடைகளுக்கு எதிராகவும், சமூகப் பிரச்சனைகளுக்காகவும், மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். மேலும் தமிழகத்தில் குடிப்பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிவதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள்ளிடம் துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும்  மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் போராட்டத்தி்ல் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக வராக்கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. இதனை கண்டித்து, பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி கடன் ரூ.10.72 லட்சம் கோடியை முழுமையாக வசூல் செய்து, அந்த பணத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

பாஜக அலுவலகம் முற்றுகை

டாஸ்மாக் மது உட்பட தீங்கு விளைவிக்க கூடிய அனைத்து போதைப் பொருட்களையும் முற்றிலும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதே போல அதானியின் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசையும் கண்டித்து பாஜக அலுவலகத்தின் முன்பாக போராட்டத்திலும் ஏற்கனவே நந்தினி ஈடுபட்டு இருந்தார். இந்தநிலையில் சமூகவலை தளத்தில் தன்னை பாஜகவினர் விமர்சிப்பதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் கூறி போராட்டத்தில் இன்று ஈடுபட்டார். இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.  சமூக ஆர்வலருமான நந்தினி மற்றும் அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோர் இணைந்து, பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பாஜகவினர் மிரட்டல் விடுப்பதாக புகார்

இந்நிலையில், பாஜகவினர் தங்களுக்கு மிரட்டல் விடுப்பதாக கூறி, இருவரும் பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், நந்தினி மற்றும் அவரது சகோதரியை தடுத்து நிறுத்தினர். பாஜகவினர் பெண்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார். நந்தினியின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படியுங்கள்

சீமான், திருமுருகன் காந்தியின் டுவிட்டர் பக்கம் முடக்கம்.! எதிர்ப்பு தெரிவித்து களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.18 கோடி வரி செலுத்துங்கள்..! பிரியாணி மாஸ்டரை அதிர வைத்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!