சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே மின்சார ரயில்கள் 7 மாதம் ரத்து.. என்ன காரணம் தெரியுமா?

Published : Jun 01, 2023, 10:56 AM IST
சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே மின்சார ரயில்கள் 7 மாதம் ரத்து.. என்ன காரணம் தெரியுமா?

சுருக்கம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடம் முக்கியமானது. இந்த வழித்தடத்தில் 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. 

ஜூலை 1ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31ம் தேதி வரை 7 மாதங்களுக்கு சென்னை கடற்கரையில் இருந்து சேப்பாக்கம் வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடம் முக்கியமானது. இந்த வழித்தடத்தில் 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைகின்றனர். ஆனால், இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. 

இவற்றில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்றொரு பாதையில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 4வது ரயில் பாதை இல்லாத காரணத்தால், கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகையால், 4வது வழித்தட பணிகளுக்காக, சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை வரும் ஜூலை 1ம் தேதி முதல் 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!