சென்னை மீஞ்சூரில் நாயை கத்தியால் குத்தி கொன்ற மூன்று பேர் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மீஞ்சூரில் நாயை கத்தியால் குத்தி கொன்ற மூன்று பேர் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம், மீஞ்சூர் அன்பழகன் நகரைச் சேர்ந்த புவனேஷ்வர், தனது நண்பர் கிரண் மீது 3 பேர் தாக்குவதைக் கவனித்து, தலையிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் புவனேஷ்வரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். புவனேஷ்வர் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மீஞ்சூர் போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வந்தனர். மூன்று பேருடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்த கிரண், புவனேஷ்வரின் உதவியை நாடினார். திங்கள்கிழமை இரவு, புவனேஷ்வர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்ததாக நினைத்து, அவரைத் தாக்கச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் இளம் பெண்ணை கட்டாய படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 2 பேர் கைது
கத்திகள் மற்றும் மரக்கட்டைகளுடன் ஆயுதம் ஏந்திய அவர்கள் முழுமையாக குடிபோதையில் அவரது வீட்டிற்கு வெளியே சலசலப்பை உருவாக்கத் தொடங்கினர். அந்த நேரத்தில் புவனேஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் நாய் அங்கிருந்ததாக தெரிகிறது. அந்த நாய் அவர்களை உள்ளே வர அனுமதிக்காமால் ஆவேசமாக குரைத்துக்கொண்டே இருந்தது. அதேநேரத்தில் மூவரும் கேட்டை உடைத்து சேதப்படுத்தினர்.
இதையும் படிங்க: குமரியில் நகராட்சி ஆணையரை மாற்றக்கோரி திமுக கவுன்சிலர்களிடையே மோதல்
மேலும் கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒரு நபர் சுவர் ஏறி குதித்து நாயைத் தாக்க முற்பட்டபோது, அது அவர் மீது நாய் தாக்குதல் நடத்தியது. இதை அடுத்து மற்ற இருவரும் சுவர் ஏறி குதித்து நாயை கத்தியால் குத்தினர். அவர்கள் பலமுறை கத்தியால் குத்தியதில், நாய் உயிரிழந்தது. இதை அடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. புவனேஷ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு திரும்பிய போது நாய் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அது கத்தியால் குத்தப்பட்டிருப்பதை அறிந்த புவனேஷ்வர் அந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நாயை கொன்ற 3 பேரையும் கைது செய்தனர்.