பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் சோ - ஸ்டாலின் புகழாரம்

 
Published : Dec 07, 2016, 11:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
பத்திரிக்கை உலகின் ஜாம்பவான் சோ - ஸ்டாலின் புகழாரம்

சுருக்கம்

அரசியல் விமர்சகரும் நடிகருமான சோ  ராமசாமியின் மறைவுக்கு திமுக பொருளாளர் மு க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

சோ எனப்படும் சோ ராமசாமி சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார்.

அவரது உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள சோவின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்களும் திரை உலகத்தினரும் பொதுமக்களும் சோ உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுக பொருளாளரும் எதிர்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் சோவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது பத்திரிக்கை உலகின் மிகப்பெரிய ஜாம்பவான் சோவின் மறைவு மிகுந்த அதிரிச்சி அளிப்பதாக தெரிவத்தார்.

எதற்கும் கவலைப்படாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லும் ஆற்றலும் துணிவும் பெற்றவர் சோ என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

எம்பியாக நாடக ஆசிரியராக நடிகராக அரசியல் விமர்சகராக பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்த சோவின் மறைவு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live today 17 December 2025: நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்
100 நாள் வேலை திட்டத்தை மொத்தமாக ஒழித்துக்கட்ட துடிக்கும் மோடி அரசு.. திருமா கொந்தளிப்பு