
திட்டக்குடி,
பெய்துவரும் பருவ மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
மங்களூர் ஒன்றிய தனி அதிகாரி சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீத்தாலட்சுமி ஆகியோர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
“தற்போது பெய்து வரும் பருவமழையில் ஆறுகள், ஓடைகள், நீர்நிலைகள் ஆகியவற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்கு வெள்ளம் புகா வண்ணம், தடுக்கும் வகையில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், தெருக்கள் தோறும், மழைநீர், கழிவுநீர் தேங்கி குடிநீர் செல்லும் வழிதடங்களில் கலக்காதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திடவும், குடிநீர் மேல்நிலை தொட்டிகள், மினி டேங்குகளில் சுத்தம் செய்து சுகாதாரமான பாதுகாப்பு குடிநீர் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.