தலைமை செயலகத்தை நடுநடுங்க வைத்த பாம்பு…  போராடிப் பிடித்த தீயணைப்பு படை வீரர்கள்…

 
Published : Jun 16, 2017, 06:00 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
தலைமை செயலகத்தை நடுநடுங்க வைத்த பாம்பு…  போராடிப் பிடித்த தீயணைப்பு படை வீரர்கள்…

சுருக்கம்

snake in chennai secrateriate building

சென்னை தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்த 6 அடி நீள பாம்பு ஒன்றை தீயணைப்புப் படை வீரர்கள் பிடித்து பிண்டி பாம்பு பூங்காவில் விடப்பட்டது.

தமிழக சட்டப் பேரவை நேற்று முன்தினம் தொடங்கியது. தொடங்கிய முதல் நாளே, கூவத்தூரில் எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்திம் மீது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சனை எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து சட்டப் பேரவைக்குள் திமுகவின் நடத்திய ஆர்ப்பாட்டதை அடுத்து அவர்கள்  அனைவரும்  அவையை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து அவர்கள் ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சட்டப் பேரவையில் நேற்று மீண்டும் கூவத்தூர் பிரச்சனை எழுப்பப்பட்டது. இப்படி தமிழக சட்டப் பேரவை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தபோது, நுழைவாயில் வழியாக 6 அடி நீள பாம்பு ஒன்று திடீரென செய்தியாளர் அறையை அடுத்துள்ள நூலக அறைக்குள் நுழைந்தது.

இதை அங்கு காவலுக்கு இருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் வந்து அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி அந்த பாம்பை பிடித்தனர். இதையடுத்து அந்த பாம்பு கிண்டி பாம்பு பூங்காவில் விடப்பட்டது

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!