கஞ்சா விற்ற ஆறு பேர் அதிரடி கைது; இரண்டரை கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்...

 
Published : Nov 13, 2017, 08:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
கஞ்சா விற்ற ஆறு பேர் அதிரடி கைது; இரண்டரை கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்...

சுருக்கம்

Six people arrested for selling cannabis Two and a half kilograms 2 motorcycles seized

இராமநாதபுரம்

இராமேசுவரம் அடுத்துள்ள மண்டபத்தில் கஞ்சா விற்ற ஆறு பேரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சாவையும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம், மண்டபம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்கப்படுகிறது என்று மண்டபம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்படி, மண்டபம் காவல்துறை உதவி ஆய்வாளர் மாயராஜலட்சுமி தலைமையில் கண்காணிப்பு மற்றும் சுற்றுப் பணியில் காவலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நேரு நகர் சிறுவர் பூங்காவில் கஞ்சா விற்கப்படுவகிறது என்று இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து காவலாளர்கள் அங்கு விரைந்துச் சென்றனர். காவலாளர்களைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற ஆறு பேரை காவலாளர்கள் துரத்திப் பிடித்தனர்.

இதனையடுத்து அவர்களை சோதனையிட்டபோது இரண்டரை கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மண்டபத்தைச் சேர்ந்த ஜெகதீஷன் (46), முகேஷ் (24), ராமகிருஷ்ணன் (33), பொன்னாண்டி (58), பாலசுப்பிரமணி (34), இளவரசன் (25) ஆகிய ஆறு பேரை காவலாளர்கள் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு