காவல் சீருடையில் களவாணித் தனம் செய்த அறுவர் கைது…

Asianet News Tamil  
Published : Dec 20, 2016, 08:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
காவல் சீருடையில் களவாணித் தனம் செய்த அறுவர் கைது…

சுருக்கம்

மதுராந்தகம்,

மேல்மருவத்தூரில் காவல் சீருடை, கத்தி மற்றும் டம்மி துப்பாக்கியுடன், மக்களிடம் வழிப்பறிச் செய்து களவாணித் தனம் செய்த ஆறு பேரை காவலாளர்கள் கைது செய்து, விசாரனை மேற்கொண்டு வருகிறார்கள்.

காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் காவலாளர்கள் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்தப் பகுதியில் உள்ள வந்தவாசி சாலையில் காவலாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பக்கமாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக ஒரு கார் அங்கும் இங்குமாகச் சுற்றித் திரிந்துக் கொண்டு இருந்தது.

இதனை, கவனித்த காவலாளர்கள், அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர். பின்னர், அந்த காரை சோதனை செய்தபோது, அதில் வெவ்வேறு விதமான ‘நம்பர் பிளேட்கள்’ இருந்தது. காரின் முன்புறம் “போலீஸ்” எனவும் எழுதப்பட்டு இருந்தது.

மேலும் காரில் இருந்த ஒரு பையில் சில காவல் சீருடைகளும், காரின் முன்புறம் கொடி கட்ட பயன்படும் கம்பி, கத்தி மற்றும் டம்மி துப்பாக்கியும் இருந்தன. இவையனைத்தயும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து காரில் இருந்தவர்களிடம் காவலாளர்கள் விசாரனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அளித்த பதில் முரணாக இருந்தது.

இதனையடுத்து காரில் இருந்த வேலூரைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (27), ரகு (24), எழில்பாபு (40), சிவா, வேலூர் மாவட்டம் சேத்துப்பட்டைச் சேர்ந்த ஆதிமூலம் (42), ஆரணியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் (35) ஆகிய 6 பேரையும் காவலாலர்கள் கைது செய்தனர்.

எனவே, பிடிபட்ட 6 பேரும் காவல் சீருடை அணிந்துகொண்டு மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டார்களா? என்ற கண்ணட்டத்தில் காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த காரை பின்தொடர்ந்து வந்த மற்றொரு கார் காவலாளர்களைப் பார்த்ததும் நிற்காமல் வேகமாகச் சென்று விட்டது.

இந்த காரை, பிடிபட்டவர்களின் கூட்டாளி நரேஷ் என்பவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது. அவரையும் காவலாளர்கள் தேடி வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

ED, சிபிஐ, அமித்ஷா மிரட்டலால் உருவான NDA கூட்டணி.. விளாசித் தள்ளிய ஸ்டாலின்.. பிரதமர் மீதும் விமர்சனம்!
பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவான கேடு கெட்ட கட்சி பாஜக.. வெட்கமே இல்லையா? பிரதமர் மோடியை விளாசிய உதயநிதி!