
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் ஒரே நாளில் ஆறு யானைகள் ரேசன் கடை, குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பகுதிக்கு புதன்கிழமை இரவு வந்த ஆறு யானைகள் அங்குள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர் நடத்தும் நியாய விலைக் கடையை சேதப்படுத்தியது. அதில், கடையின் உள்ளே இருந்த பொருள்களையும் சேதப்படுத்தின.
அதேபோல, அருகில் உள்ள கடை மற்றும் குடியிருப்புகளையும் அவை விட்டுவைக்காத யானைகள் அவற்றையும் சேதப்படுத்திவிட்டன.
மேலும், நல்லமுடி எஸ்டேட், ஹை பாரஸ்ட் எஸ்டேட் பகுதிகளிலும் இந்த யானைகளால் சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத் துறையினர் சுற்றுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.