
அரியலூர்
அரியலூரில் திருமணமாகி ஒருமாதம் கூட ஆகாத நிலையில் முந்திரிகாட்டில் மாப்பிள்ளை தூக்கிட்ட நிலையில் கிடந்ததால் தற்கொலையா? கொலையா? என்று சந்தேகம் அடைந்த காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குமிழியம் காலனித் தெருவைச் சேர்ந்த பெயிண்டர் மகேஷ் (32). இவருக்கு போன மாதம் 10-ஆம் தேதி திருமணம் நடந்தது.
அப்போதில் இருந்தே குடும்பத்தில் சில தகராறுகள் ஏற்பட்டு வந்தத நிலையில் புதன்கிழமை இவர், தனது மனைவியை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, ஊருக்கு திரும்பியுள்ளார். ஆனால், அவர் வீட்டுக்கு வரவில்லையாம்.
வீட்டிற்கு வராததால் இவரது குடும்பத்தார் பல இடங்களில் தீவிரமாக தேடியுள்ளனர். ஆனால் இவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை சிறுகடம்பூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான முந்திரிகாட்டில் மகேஷ் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடக்கிறார் என்ற தகவல் இரும்புலிக்குறிச்சி காவலாளர்களுக்கு கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற காவலாளர்கள், மகேஷின் உடலை மீட்டு செயங்கொண்டம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு உடல் கூராய்வு நடத்தப்பட இருக்கிறது,
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து மகேஷ் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாராவது கொன்றுவிட்டனரா? என்று தீவிரமாக காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.