’பாகிஸ்தான் பயங்கரவாதிகளை முற்றிலும் அழித்தொழியுங்கள்’...மறைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனின் மனைவி ஆவேசம்...

By Muthurama Lingam  |  First Published Feb 26, 2019, 12:58 PM IST

’பயங்கரவாதிகளின் வெறிச்செயலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்ப நிலைமைகளை மனதில் கொண்டாவது அவர்களை முற்றிலும் அழித்தொழிக்கவேண்டும்’ என்று மறைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனின்  மனைவி காந்திமதி ஆவேசமாகப் பேசியுள்ளார்.


’பயங்கரவாதிகளின் வெறிச்செயலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்ப நிலைமைகளை மனதில் கொண்டாவது அவர்களை முற்றிலும் அழித்தொழிக்கவேண்டும்’ என்று மறைந்த ராணுவ வீரர் சிவச்சந்திரனின்  மனைவி காந்திமதி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 40 பேர் பலியாகினர். இதில் தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரும் பலியானார்கள்.

Tap to resize

Latest Videos

undefined

இருவரின் உடல்களும் கடந்த 16-ந்தேதி அவர்களது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பொது மக்கள் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு திரண்டு நின்ற இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பியதோடு, அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் வலியுறுத்தினர்.

இதேபோல் சிவச்சந்திரன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், பாகிஸ்தானுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.மேலும் பலியான சிவச்சந்திரனின் மனைவி காந்திமதியும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றார். இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு இருந்த பயங்காரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.திறமையுடன் செயல்பட்ட இந்திய விமானப்படை வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி ’’பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

பெண்கள் தங்களது கணவர்களை இழந்து தவிக்கிறார்கள். குழந்தைகள் அப்பா என்று அழைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் வேரோடு அழிக்க வேண்டும். தற்போது நடந்துள்ள இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல் சற்றே ஆறுதல் அளித்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

click me!