
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, இளைஞர் ஒருவர் தனது தங்கையை கர்ப்பமாக்கி விட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடை அடுத்த திருச்சாகவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வஜ்ரம். இவரது மகள் லட்சுமி கம்பை நல்லூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், லட்சுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் முள்ளனூர் ஓடை கரையில் பள்ளி மாணவி ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அந்த உடலை கைப்பற்றி, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த உடல் காணாமல் போன மாணவி லட்சுமியின் உடல் என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்தது. லட்சுமியின் பெற்றோர் பன்றி வியாபாரம் செய்வதற்காகா அடிக்கடி பெங்களூருக்கு சென்று வரும் நிலையில், அவரது பெரியப்பா மகனான பிரதாப், லட்சுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அப்போது, சிறுமி லட்சுமியை ஏமாற்றி, அவரை கர்ப்பமாக்கி . பின்னர் அந்த கர்ப்பத்தை கலைப்பதற்காக பிரதாப் அழைத்தபோது, அதை ஏற்க லட்சுமி மறுத்துள்ளார். இந்த ஆத்திரத்தில் லட்சுமியை அடித்து கொலை செய்த பிரதாப், உடலை முள்ளனூர் ஓடை கரையில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் எதுவும் தெரியாதது போல நடித்த பிரதாப், உறவினர்களுடன் சேர்ந்து காணமல் போன லட்சுமியை தேடுவது போல நாடகமாடியுள்ளார். பின்னர் மது குடித்துவிட்டு, நடந்த சம்பவத்தை அவர் தனது நண்பர்களிடம் உளறியுள்ளான்.
இதையடுத்து பிரதாப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியை அவரது அண்ணனே கர்ப்பமாக்கி கொலை செய்த நிகழ்வு தர்மபுரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.