
தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் அடுத்த இருநாட்களுக்கு மழை இருக்கும் என்றும், அடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாகக் மாறக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன்தனது பதிவில் கூறியுள்ளதாவது-
தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் இன்றும், நாளையும் மழை இருக்கும்.
தென் மேற்கு வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கன்னியாகுமரி கடற்கரையை நோக்கி இன்று அல்லது நாளை நகர்ந்துவிடும். இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
வரும் நாட்களில் தென் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் இந்த மழையால் படிப்படியாக உயர்க்கூடும்.
புயலாக மாறுமா?
அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக மாற வாய்ப்புள்ளது. இது எங்கே நகரும் என்பதை இப்போது கூற முடியாது. இந்த புயல் தெற்கு அந்தமானில் இருந்து வடமேற்காக கூட நகரலாம். ஆதலால், அந்தபுயல் எந்த திசை நோக்கி நகர்கிறது என்பதை அறிய சிறிது காத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்