அய்யா கையெடுத்து கும்பிடுறேன் ஓபிஎஸை ஆதரிங்க…எம்எல்ஏ-க்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் இயக்குநர் விசு..

 
Published : Feb 11, 2017, 08:15 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
அய்யா கையெடுத்து கும்பிடுறேன் ஓபிஎஸை ஆதரிங்க…எம்எல்ஏ-க்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் இயக்குநர் விசு..

சுருக்கம்

ஒபிஎஸ் சசிகலா இடையே நடைபெற்று வரும் அதிகாரப் போட்டி நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது. சசிகலா தரப்பு தங்களுக்கு பெரும்பான்மை உள்ளது எனவும் ஆட்சி அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் ஆளுநரிடம் கேட்டுள்ளனர்.

ஓபிஎஸ்ம் தனக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். பரபரப்பான இந்த சூழ்நிலையில் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் ஒபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான விசுவும் ஓபிஎஸ்க்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வாட்ஸ் அப் மூலம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை என்ன என்று உங்களுக்கு தெரியும்.

பன்னீர்செல்வம் கவர்னரை சந்திக்க 5 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்துள்ளார். 5 என்பதை எதுக்கு சொல்வோம். பஞ்ச பூதங்களுக்கு சொல்வோம். அல்லது பஞ்ச பாண்டவர்களை சொல்வோம். இவை பாசிட்டிவ் ஆனவை என தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு 7½ மணிக்கு கவர்னரை பார்க்க நேரம் ஒதுக்கி இருக்கிறார். 7½ என்பதை எதற்கு சொல்வோம் என்பது உங்களுக்கு நல்லா தெரியும் என நக்கலாக குறிப்பிட்டுள்ளார்.

தான் 6 ஆண்டுகள் ஜெயா டி.வி.க்காக மக்கள் அரங்கம் நிகழ்ச்சி நடத்தியதாகவும், ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே தன்னால் ஜெயலலிதாவை பார்க்க முடிந்தது என குறிப்பிட்டுள்ளார். அதன்பின்னர் ஒரு முறைகூட ஜெயலலிதாவை அவர்கள் தன்னை பார்க்க அனுமதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அதை என்னால் வெளியே சொல்லவும் முடியவில்லை

அப்போது நான் என்ன கஷ்டப்பட்டேனோ அதே கஷ்டத்தை தற்போது பன்னீர்செல்வம் படுகிறார் என தெரிவித்துள்ளார். மக்கள் அரங்கம் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது யார் யாரோ வந்தாங்க. என்னென்னமோ உத்தரவு போட்டாங்க.

ஒரு நாள் சொல்வதை மறுநாள் மாற்றி சொல்வாங்க, இப்படித்தான் யாரோ ஒரு குடும்பம் தன்னை கட்டுப்படுத்தியது. ஒண்ணுமே புரியல. இப்படி கூட நடக்குமா? என்று நொந்து போனதாக குறிப்பிட்டள்ளார்.

ஜெயலலிதா இறந்தபோது, அவர் பக்கத்தில் யார் யாரோ நின்னாங்க. இதேதான் அங்கேயும் நடந்தது. ஒருவேளை அரசாங்கத்தை அவர்களிடம் ஒப்படைத்தால் அங்கும் யார் யாரோ வருவார்கள். என்ன என்னவெல்லாமோ செய்வாங்க. இதை மக்களிடம் ஒன்றும் கேட்க முடியாது.

மக்கள் தலையெழுத்து 135 பேரிடம் இருக்கிறது. அவர்களை கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் வாழ்க்கை உங்களிடம் இருக்கிறது. பிளீஸ்.. பிளீஸ்.. கண்டிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரியுங்கள். சசிகலாவை அல்ல என மிகுந்த உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
Tamil News Live today 21 December 2025: பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!