
சசிகலா தரப்புக்கு மேலும் மேலும் சிக்கலாக போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பை குறைத்துள்ளனர். இதனால் நிலைமை எப்படி போகிறது என்று தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரையில் போலீஸ் பாதுகாப்பு மிகுந்த கோட்டையாக போயஸ் கார்டன் இருந்தது.
கோர்செல் என அழைக்கப்படும் முதல்வரின் தனிபாதுகாப்பு போலீசார் , டிஎஸ்பி பெருமாள் சாமி தலைமையிலும் , டிசி.சுதாகர் தலைமையில் செக்யூரிட்டி சென்னை போலீசார் பாதுகாப்பும், இது தவிர மற்ற பகுதி டிசிக்கள் தலைமையில் சுழற்சி முறையில் பாதுகாப்பும் இருக்கும்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் இதே பாதுகாப்பு தொடர்ந்தது விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து போலீசார் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் டி.சி.டாக்டர்.சுதாகர் , முதல்வரின் தனிபாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி உட்பட தனிப்பிரிவு போலீசார் சாதாரண ஆட்கள் போல் போயஸ் கார்டனிலேயே பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று கவர்னருடன் டிஜிபி நடத்திய ஆலோசனையை அடுத்து போயஸ் கார்டனிலிருந்த போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.