
பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் 216வது குருபூஜை விழா இன்று தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்
இந்நிலையில் இது தொடர்பாக சொந்த நாட்டு அரசியலை சிங்கபூருக்கு கொண்டு வராதீங்க என சிங்கப்பூர் தமிழ் மக்களுக்கு சிங்கப்பூர் காவல் துறை அறிக்கை விடுத்துள்ளது.
ஆண்டு தோரும் தேவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளன்று அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மக்கள் படையெடுத்து வந்து மாலை அணிவிப்பர்.இதில் பெரும் தலைவர்களும் உள்ளடங்குவர்.
இது தொடர்பாக பல இடங்களில் கூட்டம் நடைபெறும்,இது போன்ற கூட்டத்தையோ அல்லது பொது நிகழ்வையோ சிங்கப்பூரில் செய்ய வேண்டாம் என சிங்கப்பூர் காவல் நிலையம்அறிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது இந்த அறிக்கை வாட்ஸ் அப்பில் பரவலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது