
"பிரச்சனைக்கு தீர்வு என்னிடம் உள்ளது" தமிழன் கிட்ட மோதாதே...! எச்சரிக்கை விடுத்த சிம்பு...!
தூத்துக்குடியில் நடைபெற்று வரும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் அப்பாவி மக்கள் பலர் கொன்று வீழ்த்தப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு தொடர்ந்து பலர் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் கமலஹாசன், வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு பிரச்சனை உள்ளிட்ட பல சமூக பிரச்சனைகளுக்கு தமிழன் என்ற முறையில் குரல் கொடுத்து வரும் நடிகர் சிம்பு, போலீஸ் காரர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான தூத்துக்குடி மக்களுக்காக ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் சிம்பு பேசியுள்ளதாவது, "தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்கள். என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில். தலைவர்களும் பிரபலங்களும் தொடர்ந்து இறந்தவர்களுக்கு இரங்கல் மட்டுமே தெரிவித்து வருகின்றனர்.
இரங்கல் தெரிவிப்பதால் என்ன பயன்? இறந்தவர்கள் திரும்பி வந்துவிடுவார்களா? நாளுக்கு நாள் இறந்தவர்கள் எண்ணிக்கை தான் அதிகரித்துக்கொண்டே போகிறது. மனசு வலிக்குது மொழி தான் பிரச்சனையா? அப்படியென்றால் நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். பிரச்சனைக்கு தீர்வு என்னிடம் உள்ளது. தமிழார்கள் கிட்ட மோததே" என்று சிம்பு கூறியுள்ளார்". சிம்புவின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.