அன்றைக்கு "தெர்மோகோல்" விட்ட நந்தூரி தான்....இன்று தூத்துக்குடி ஆட்சியர்..!

First Published May 25, 2018, 6:24 PM IST
Highlights
sandeep nanthoori floated the thermokol in vaigai


தூத்துக்குடி ஆட்சியாளராக புதியதாக பொறுப்பேற்று உள்ள சந்தீப் நந்தூரி மிகவும் சுறு சுறுப்பாக செயல்பட்டு வருகிறார்

தூத்துக்குடியில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும் மக்களை கொஞ்சம் சமாதானப்படுத்தும் விதமாகவும் மிகவும் அழகாக பொறுமையாக செயல்படுத்தி வருகிறார்.

தூத்துக்குடி ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பிறகு மாற்றப் பட்டு நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி  கொண்டு வரப்பட்டர்.

தூத்துக்குடி ஆட்சியாளராக பதவியேற்ற உடன் அவரை சூழ்ந்துக் கொண்ட  செய்தியாளர்கள் அவரிடம் பல கேள்விகளை முன் வைத்தனர்

அதற்கு பதில் அளித்த, நந்தூரி " நான் இப்போது தான் பதவி ஏற்று உள்ளேன். பிறகு விரிவாக பேசலாம்....துப்பாக்கிசூடு  தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தெரிவித்து இருந்தார்.

தெர்மோகோல் விட்ட தூத்துக்குடி ஆட்சியர்..!

இதற்கு முன்னதாக,தேனீ மாவட்டத்தில் அமைந்திருக்கும் வைகை அணையின் நீர் மட்டம்  குறையாமல்  தடுப்பதற்காக அதாவது நீர் ஆவியாதலை தடுப்பதற்காக அமைச்சர் செல்லூர் ராஜி  அணையில் தெர்மொகொலை விட்டார் 

அவருடன் தெர்மோகோல் விட்ட அன்றைய ஆணையாளர் சந்தீப் நந்தூரி தான் இன்றைய தூத்துக்குடி ஆட்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!