நடிகர் சிம்பு, படங்களில் நடிக்க தடை!

 
Published : Nov 24, 2017, 05:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
நடிகர் சிம்பு, படங்களில் நடிக்க தடை!

சுருக்கம்

Simbu banned to act in the film!

சிம்பு நடிப்பில் திரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனரின் இயக்கத்தில் வெளியான கில்மா டைப் படமான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் பயங்கர பிளாப். சிம்புவின் சினிமா கெரியரே காலியாகிவிடும் என்ற அளவுக்கு வலைதளங்களில் ஏகப்பட்ட கமெண்ட்ஸ்.

சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பட விளம்பரம் ஒன்றில், பிரபல நடிகர்களால் தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறியிருந்தார். கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு நடிகர்கள் சிம்பு, வடிவேலு, நடிகை த்ரிஷா ஆகியோருக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது.

நோட்டீஸ் குறித்து விளக்கம் அளித்தவுடன், தவறு யார் மீது இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நடிகர் சிம்புவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ரெட் கார்டு வழங்கப்பட்டது குறித்து சிம்பு தரப்பும் உறுதி செய்திருப்பதாக தெரிகிறது.

சிம்புவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை குறித்து முடிவு வரும் வரை நடிகர் சிம்பு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

ஆனால், நடிகர் சிம்புவின் அடுத்த படம் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமானார். சிம்புவுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், புதிய படத்தில் சிம்பு நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"
மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி