எங்க குடும்பத்தையே கீழ்த்தரமாக பேசியவர்தான் அன்புசெழியன்! சினிமா பைனான்சியர் மீது குவியும் புகார்!

 
Published : Nov 24, 2017, 02:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
எங்க குடும்பத்தையே கீழ்த்தரமாக பேசியவர்தான் அன்புசெழியன்! சினிமா பைனான்சியர் மீது குவியும் புகார்!

சுருக்கம்

Complain on cinematic financier Anbuchezhiyan

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது நடிகரும், இயக்குநருமன சசிகுமார், சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தனது உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக்குமார், கந்து வட்டி கொடுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர் அசோக்குமாரின் டார்ச்சர் குறித்து அசோக்குமார் கைப்பட கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான பைனான்சியர் அன்புசெழியனை தேடி வருகின்றனர். பைனான்சியர் அன்புச்செழியன் கேரளா சென்றுள்ளதாகவும், தனிப்படை போலீசார் கேரளா சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான சசிகுமார், பைனான்சியர் அன்புச்செழியன் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், என்னுடைய அத்தை மகன் அசோக்குமார், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகரில் குடியிருந்து வருகிறார். என்னுடன் அசோக்குமார், இணை தயாரிப்பாளராக இருருந்து வந்தார். தாரைத்தப்பட்டை பெரும் நஷ்டம். நாங்கள் தற்போது கொடிவீரன் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறோம். 30 ஆம் தேதி வெளியிடத் தயாராக இருந்தோம்.

எங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலம் தாரைத்தப்பட்டை என்ற படத்தை வெளியிட்டோம். அதற்கு சென்னை தி.நகர், ராகவா சாலையில் வசிக்கும் பைனான்சியர் மதுரை அன்புச்செழியனிடம் கடனாக பணம் பெற்றிருந்தோம். அதற்கான வட்டியையும் செலுத்தி வந்தோம். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதால் நாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தோம். மேற்கண்ட சூழ்நிலையில் தற்போது கொடிவீரன்
படத்தினை வெளியீடு செய்வதற்காக வேலை நடந்து கொண்டிருந்தது. நெருக்கடி. ஆனால், அன்புச்செழியன் அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தினை அசல் மற்றும் வட்டி, வட்டிக்கு வட்டி போட்டு ஒரு பெரும் தொகையினை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

இல்லையென்றால் கொடிவீரன் படத்தை வெளியிட விடமாட்டேன் என்று கடுமையாக நெருக்கடி கொடுத்து வந்தார். நான் எனது அடுத்த படவேலையில் இருந்ததால், இணை தயாரிப்பாளர் என்ற முறையில் அசோக்குமர் மேற்கண்ட கடன் பிரச்சனையைக் கையாண்டு வந்தார். குடும்பத்தைப் பற்றி கீழ்த்தரமாகவும், அநாகரிகமாகவும் பேசுவதாக கூறி அசோக்குமார் வருத்தப்பட்டு வந்தார். நான் வருத்தப்பட வேண்டாம் என்று கூறி வந்தேன்.

இந்த நிலையில் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அசோக்குமார் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொடிவீரன் படத்தை வெளியிட மாட்டேன் என்றும், எங்கள் வீட்டுப் பெண்களைத் தூக்கி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். கடந்த 7 வருடங்களாக வட்டிக்கு வட்டி என்று பணம் வாங்கி வந்தார் அன்புச்செழியன் என்று அசோக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, கந்து வட்டி கேட்டு மிரட்டியதோடு
அசோக்குமாரை தற்கொலைக்குத் தூண்டிய அன்புச்செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் சசிகுமார் அந்த புகாரில்
கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!