பெண் போலீஸ் தற்கொலை : பயிற்சி எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்

 
Published : Oct 15, 2016, 10:04 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
பெண் போலீஸ் தற்கொலை : பயிற்சி எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்

சுருக்கம்

பெண் போலீஸ் தற்கொலை : பயிற்சி எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்

ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துவிட்டு, திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், நெல்லை பெண் போலீஸ் தற்கொலை பிரச்னையில் பயிற்சி எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

திருநெல்வேலி வீரவநல்லுாரை சேர்ந்த ராமு (29). பெண் காவலராக வேலை பார்த்து வந்தார். ஆலங்குளம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரிந்த போது அவருக்கும், ஏட்டு அருமைநாயகம் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் பல இடங்களுக்கு சுற்றி திரிந்து உல்லாசமாக இருந்தனர்.

பின்னர், அருமை நாயகம் எஸ்ஐயாக தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் பயிற்சி பெற்று வருகிறார். அவரை கடந்த சில நாட்களுக்கு முன் செல்போனில் தொடர்பு கொண்ட ராமு, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு, தனக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருப்பதை கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் செய்தார். எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து ராமு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அருமைநாயகம் மீது கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டது. அப்போதும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மனமுடைந்த ராமு, கடந்த 10ம் தேதி தற்கொலை செய்து கொணடார்.

அவரது உடல் கடந்த 4 நாட்களாக நெல்லை மருத்துவக்கல்லுாரியில் உள்ளது. அருமைநாயகம் மீது நடவடிக்கை கோரி சில அமைப்பினர், நெல்லை டி.ஐ.ஜி., அலுவலகத்தை சில நாட்களுக்கு முன் முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து நேற்று, அருமைநாயகத்தை 'சஸ்பெண்ட்' செய்து பயிற்சிக் கல்லுாரி முதல்வர் உத்தரவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்