
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் ரகுபதி, மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் திமுக எம்எல்ஏவும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எஸ்.ரகுபதி, இன்று காலை திருமயம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனது காரில், பயணம் மேற்கொண்டார். அவருடன் மேலும் 4 பேர், சென்றனர்.
அரிமளம் புதுப்பட்டி அருகே உள்ள பொந்து குழிவிளக்கு என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எம்எல்ஏ ரகுபதி உள்பட 5 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக, உயிர் தப்பினர். இதையடுத்து, அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தற்போது, சிகிச்சை பெற்ற எம்.எல்.ஏ. ரகுபதி, இன்று வீடு திரும்பினார்.