
டவுன் பஸ்சில் குறைந்த பட்ச கட்டணம் 8 ரூபாயாக உள்ளதாலும் எங்களின் ஷேர் ஆட்டோக்கள் விலை அதிரடியாக குறைக்கபட்டுள்ளதாம் பயணிகள் சந்தோஷமாக பயணம் செய்கின்றனர். சேலம் முழுவதும் பேருந்துகளை தவிர்த்துவிட்டு ஷேர் ஆட்டோ பயணம் அதிகரித்துள்ளது.
முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் இரவோடு இரவாக இப்படி தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதனால், தாங்கள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், ஓட்டை ஒழுகல் பேருந்துகளை மக்கள் தலையில் கட்டி, இரு மடங்குக்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் அதிமுக அரசுக்கு துளியும் மனசாட்சியும், மக்கள் மீது அக்கறையின்மையையும் காட்டுகிறது. பேருந்து தொழிலாளர்களின் போராட்டத்தின் எதிரொலியாகவே இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும். மசோதா நிறைவேற்றப்பட்டால் அரியர்ஸ் தொகையுடன் சேர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் தலா 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுவர். முன்னாள் எம்எல்ஏக்கள் 20ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவர் என இப்பட்ட ஒரு சட்டமன்றத்தில் அறிவித்த அடுத்து பத்து நாட்களில் இப்படி மக்களின் மீது இந்த சர்ஜிக்கல் அட்டாக் நடத்தியுள்ளது அதிமுக அரசு. இவங்க பண்ற இந்த கொடுமை போதாதென்று, சென்னையில் ஷேர் ஆட்டோக்களும் தங்களின் கட்டணத்தை உயர்த்தி அடாவடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் அதிருப்தியில் உள்ள பயணியரை, தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ஷேர் ஆட்டோக்களில் பேருந்து கட்டணம் உயர்வதற்கு முன்பு குறைந்த பட்ச கட்டணம் 8 முதல் 10 ரூபாயாக இருந்த நிலையில் தற்பொழுது சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஐந்து ரோடு, அஸ்தம்பட்டிக்கு இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களின் கட்டணத்தை உரிமையாளர்கள் அதிரடியாக குறைத்துள்ளனர்.
பேருந்து கட்டண உயர்வால் அதிருப்தியில் இருக்கும், பயணியரை எங்கள் பக்கம் இழுப்பதற்காக, கட்டண குறைப்பு செய்துள்ளோம் என கூறிய ஆட்டோ டிரைவர், டவுன் பஸ்சில் குறைந்த பட்ச கட்டணம் 8 ரூபாயாக உள்ளதாலும் எங்களின் ஆட்டோக்கள் 5 ரூபாயில் இயக்கப்படுவதாலும் பயணியர் மத்தியில் ஷேர் ஆட்டோக்களின் மீது மவுசு அதிகரித்துள்ளது என்று கூறினார். மேலும், சேலத்தில் மக்கள் பலர் ஆட்டோக்களில் கட்டணம் குறைவு என்பதால், பேருந்தை முற்றிலுமாக தவிர்த்து விட்டு ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர்.