சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் யுபிஎஸ்சி தேர்வு முடிவு விளம்பரத்தில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வு செய்திருந்த பாடங்கள் பற்றிய தகவல்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளன என நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்துள்ளது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2022 தொடர்பாக தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019இன் விதிகளுக்கு முரணான எந்தவொரு பொருட்கள் அல்லது சேவைகளிலும் தவறான விளம்பரங்கள் செய்யப்படாமல் அதனை விசாரித்து உறுதிசெய்யவும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது.
undefined
சங்கர் ஐஏஎஸ் அகாடமி தொடர்பான வழக்கை விசாரித்த் சிசிபிஏ தலைமை ஆணையர் நிதி கரே, யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார்.
"சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் விளம்பரம், நுகர்வோரான யுபிஎஸ்சி ஆர்வலர்களை இலக்காகக் கொண்டது. அதனால்தான், விளம்பரங்களில் உண்மையும் நேர்மையும் இருக்க வேண்டும். முக்கிய அம்சங்கள் நுகர்வோர் தவறவிடாத வகையில் தெளிவாக இருக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
மீண்டும் 'எனக்குத் தெரியாது' என்ற ரஜினி! ட்ரெண்டிங்கில் வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
UPSC சிவில் சர்வீஸ் தேர்வு 2022 தொடர்பான சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் விளம்பரத்தில், சங்கர் ஐஏஎஸ் அகாடமி அகில இந்திய அளவில் 933 தேர்வர்களில் 336 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளது. முதல் 100 இடங்களில் 40 பேர், தமிழ்நாட்டிலிருந்து 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் அவர்களில் 37 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி படித்தவர்கள் என்றும் குறிப்பிடுகிறது.
சங்கர் ஐஏஎஸ் அகாடமி பல்வேறு வகையான படிப்புகள் பற்றி விளம்பரப்படுத்தியுள்ளது. ஆனால் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வு செய்திருந்த பாடங்கள் பற்றிய தகவல்கள் விளம்பரத்தில் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளன என ஆணையத்தின் விசாரணையில் கண்டறியப்பட்டது.
ஆணையம் இந்தத் தகவல்களைக் கோரியபோது, சங்கர் ஐஏஎஸ் அகாடமி விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையான 336 க்குப் பதிலாக 333 பேரின் விவரங்களை மட்டுமே சமர்ப்பித்தது. அதன்படி, 336 மாணவர்களில், 221 பேர் இலவச நேர்காணல் வழிகாட்டுதல் திட்டத்தில் தான் பயற்சி பெற்றுள்ளனர்.
இந்த உண்மை சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் விளம்பரத்தில் வெளியிடப்படாதது நுகர்வோரை ஏமாற்றுவதாகும் என்றும் இதுபோன்ற முக்கிய உண்மையை மறைத்து, தவறான விளம்பரங்கள் வெளியிடுவது UPSC ஆர்வலர்களைத் தவறாக வழிநடத்துவதாகும் னெ்றும் ஆணையும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக, சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.
ஹைபிரிட் அவதாரம் எடுத்த எம்.ஜி. ஆஸ்டர் கார்! இந்தியாவில் ரிலீஸ் எப்போது?