பள்ளி தாளாளர் அறையில் வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு... அதிமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது...!

Published : Nov 10, 2018, 10:18 AM ISTUpdated : Nov 10, 2018, 10:26 AM IST
பள்ளி தாளாளர் அறையில் வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு... அதிமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது...!

சுருக்கம்

பள்ளி தாளாளர் அறையில் வைத்து 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக வட்ட செயலாளர் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பள்ளி தாளாளர் அறையில் வைத்து 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிமுக வட்ட செயலாளர் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் ஆழ்வார்தோப்பில் காயிதே மில்லத் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தாளாளராக மீரான் மைதீன் பணியாற்றினார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், பள்ளியின் செயலாளர்  சலீம்(50)  தாளாளர் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் சலீம் அதிமுக வட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். 

பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவி ஒருவரை சலீம் தினமும் பள்ளியில் உள்ள தனது அறைக்கு  அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஆகையால் நல்ல முறையில் பள்ளிக்கு சென்று வந்த சஹானா, இடையில் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். ஆனாலும் சஹானாவின் பெற்றோர் அவரைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டனர். நேற்று முன்தினம் மாலையும் வழக்கம்போல் தனது அறையில் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். 

பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனால் பெற்றோர் நேற்று காலை பள்ளிக்கு சென்று சலீமிடம் வாக்குவாதம் முற்றி தாக்க தொடங்கினர். பிறகு இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சலீமை கைது செய்து விசாரணை நடத்தினர். பள்ளி மாணவியிடம் விசாரணை நடத்தியதில் சம்பவம் நடந்தது உண்மை என்பதைத் தெரிந்துகொண்ட போலீஸார் சலீமை  போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சலீம் அமைச்சருக்கு நெருக்கமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொ*லை.! வெளியான அதிர்ச்சி காரணம்!
திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்